×

ஊழியரின் மகள் திருமண விழாவிற்கு சீர்வரிசை கொண்டு வந்த சிங்கப்பூர் தொழிலதிபர்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை சேர்ந்தவர் செந்தூர்பாண்டியன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் செந்தூர்பாண்டியன் மகள் முஹாவிஜிக்கு நேற்று முதுகுளத்தூரில் திருமணம் நடைபெற்றது. இதில் பங்கேற்க செந்தூர்பாண்டியன் பணிபுரிந்த நிறுவன உரிமையாளர்களான கூலின், கான்மிங்க், டிம் ஆகியோர் சிங்கப்பூரில் இருந்து முதுகுளத்தூருக்கு வந்த அவர்கள், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து சாரட் வண்டியில் செண்டை மேளம் முழங்க மணமக்களுக்கு சீர்வரிசை கொண்டு வந்தனர். பின்னர் இவர்கள் தாலி எடுத்துக் கொடுக்க இனிதே திருமணம் நடைபெற்றது. பின்னர் செந்தூர்பாண்டியன் மகள் முஹாவிஜி தற்காலிகமாக பணியாற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்றனர். தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கினர்.

The post ஊழியரின் மகள் திருமண விழாவிற்கு சீர்வரிசை கொண்டு வந்த சிங்கப்பூர் தொழிலதிபர்கள் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Senthurpandian ,Muthukuladhur, Ramanathapuram district ,Singapore ,Senthurpandiyan ,Muhaviji ,Mudugulathur ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...