×

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவில் போட்டியிட விருப்ப மனுதாக்கல் தொடங்கியது

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுதாக்கல் தொடங்கியது. தி.மு.க சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்களுக்கான விருப்ப மனுதாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று, திமுக எம்பி கனிமொழி வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி, திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விருப்ப மனுவை பூர்த்தி செய்து ரூ.50 ஆயிரம் கட்டணத்துடன் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் வழங்கினார்.

அதேபோல், 38 பேர் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு தாக்கல் செய்தனர். மேலும், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்பி போட்டியிட வேண்டும் என்று தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்பட திமுக நிர்வாகிகள் 12 விருப்ப மனுக்களை நேற்று வழங்கினர்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுக்கள் வழங்கப் பட்டுள்ளது. மேலும், திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதியில் அருண் நேரு போட்டியிட வேண்டும் என்று 30க்கும் அதிகமான விருப்ப மனுக்களை வழங்கினர். இவர்கள் உள்பட 100க்கும் அதிகமானோர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்களை நேற்று வழங்கினர்.

The post நாடாளுமன்ற தேர்தலில் திமுகவில் போட்டியிட விருப்ப மனுதாக்கல் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : DMK ,CHENNAI ,Kanimozhi ,
× RELATED திமுக இளைஞர் அணிக்கு மாவட்ட வாரியாக...