×

கூட்டாட்சி கருத்தியலை உயர்த்தி பிடிக்க ஒன்று சேர்ந்து உழைப்போம்: பிறந்தநாள் வாழ்த்து கூறிய ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை: பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டாட்சிக் கருத்தியலை உயர்த்திப் பிடிக்க ஒன்று சேர்ந்து உழைப்போம் என்று எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: எனது அன்புச் சகோதரரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்க நாம் போராடுகிறோம். வருங்காலம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து முதல்வர் சமூகவலைதளப் பதிவு: தங்களது இதயப்பூர்வமான வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரரே! கூட்டாட்சிக் கருத்தியலை உயர்த்திப் பிடிக்க ஒன்றுசேர்ந்து உழைப்போம்! மேம்பட்ட, அனைவருக்குமான, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவுக்காக தொடர்ந்து உழைப்போம். இவ்வாறு கூறியுள்ளார்.

The post கூட்டாட்சி கருத்தியலை உயர்த்தி பிடிக்க ஒன்று சேர்ந்து உழைப்போம்: பிறந்தநாள் வாழ்த்து கூறிய ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M K Stalin ,Rahul Gandhi ,Chennai ,M. K. Stalin ,Tamil ,Nadu ,M.K.Stal ,All India Congress Party ,
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர்களை...