×

71வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தேசிய, மாநில தலைவர்கள் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தேசிய, மாநில தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்.
கேரள முதல்வர் பினராயி விஜயன்: தோழர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதில் உங்கள் உறுதியான நிலைப்பாடு மிகவும் ஊக்கமளிக்கிறது. நீங்கள் எல்லையில்லா மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடன் திகழவும், தொடர்ச்சியான வெற்றிகளை பெறவும் வாழ்த்துகிறேன்.
உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வரும் ஆண்டுகள் மிகுந்த மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும் மற்றும் வெற்றிகள் நிறைந்ததாகவும் இருக்கட்டும்.
பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சி மற்றும் வெற்றியை அருள்வாராக.
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சரத்பவார்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வரும் ஆண்டுகள் அளவில்லா மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும் மற்றும் வெற்றிகள் நிறைந்ததாக இருக்கட்டும்.
தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை: தமிழக முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: எல்லோருக்கும் எல்லாம் என்ற சமூகநீதிப் பாதையில் செயல்பட்டு வரும் ஆட்சியில் சொன்னதைத் தாண்டி சொல்லாத பல சாதனைகளையும் தொடர்ந்துவரும் முதல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை:தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் பெற கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். இதேபோல் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா, மநீம தலைவர் கமல்ஹாசன், தவெக தலைவர் விஜய், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

The post 71வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தேசிய, மாநில தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : National ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Delhi ,Arvind Kejriwal ,Tamil Nadu ,M.K.Stalin. ,Kerala ,Pinarayi Vijayan ,M.K.Stalin ,
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...