×

ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்காத துணை வேந்தர்களின் ஊதியம் நிறுத்தி வைப்பு: பீகார் அரசு அதிரடி

பாட்னா: பீகாரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அனைத்து அரசு பல்கலைக்கழகங்களுக்கான கல்விதுறையின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் காமேஷ்வர் சிங் தர்பாங்கா சமஸ்கிருத பல்கலைக்கழகத்தை தவிர மற்ற அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் கல்வி துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதில் நிலுவையில் உள்ள தேர்வுகளின் நிலை மற்றும் பிற பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்ட கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து துணை வேந்தர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்குள் துணை வேந்தர்களிடம் இருந்து திருப்திகரமான பதில் கிடைக்காவிட்டால் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் துணை வேந்தர்களுக்கு ஊதியம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் வங்கி கணக்கை முடக்கி வைக்கும்படி வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்காத துணை வேந்தர்களின் ஊதியம் நிறுத்தி வைப்பு: பீகார் அரசு அதிரடி appeared first on Dinakaran.

Tags : Bihar ,Government ,Patna ,Department of Education ,Kameshwar Singh Darbhanga Sanskrit University ,Government Action ,
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!