×

எம்எல்ஏ மகன், மருமகளுக்கு ஜாமீன்

சென்னை: வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா ஆகியோர், ஜனவரி 25ம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கு தொடர்பாக 16 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வாதிட்ட காவல்துறை தரப்பு வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தி வருவதாக கூறினார். இதையடுத்து, இருவருக்கும் ஜாமீன் வழங்கிய நீதிபதி இரண்டு வாரங்களுக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டுமென்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

The post எம்எல்ஏ மகன், மருமகளுக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : MLA ,Chennai ,Pallavaram ,Karunanidhi ,Ando Mathivanan ,Marlina ,Madras High Court ,Dinakaran ,
× RELATED தேர்தல் பரப்புரையில் அதிமுக கோஷ்டி...