×

வசூல் ராஜாக்கள் மோடி, அண்ணாமலை’ நோட்டாவுடன்தான் பாரதிய ஜனதா போட்டி: கரூர் எம்பி சுரீர்

திண்டுக்கல்: தமிழகத்தில் பாஜ நோட்டாவுடன் போட்டி போட்டு அதைவிட குறைந்த வாக்குகள் பெறும் என்பது உறுதி என கரூர் எம்பி ஜோதிமணி கூறினார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் கரூர் எம்பி ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி எத்தனை நதிக்கு சென்று குளித்தாலும் சரி; எத்தனை கடலுக்கு சென்று குளித்தாலும் சரி; எத்தனை கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தாலும் சரி; தமிழகத்தில் பாஜ போட்டி போடுவது நோட்டாவுடன் மட்டும் தான். ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மூலம் தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றங்கள் இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

அவர் சொல்வது போல் நிச்சயமாக பெரிய மாற்றங்கள் இருக்கும். பாஜ நோட்டாவுடன் போட்டி போட்டு அதைவிட குறைந்த வாக்குகள் பெறும் என்பது உறுதி. உலக வரலாற்றிலேயே வசூல் செய்வதற்கு நடந்த யாத்திரை என்றால் அது பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நடந்த யாத்திரை தான். தமிழகத்தில் மொத்த வசூல் ராஜாக்களாக பிரதமர் மோடியும், மாநில தலைவர் அண்ணாமலையும் இருக்கின்றனர். நான் சிட்டிங் எம்பி என்பதால் நிச்சயமாக கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post வசூல் ராஜாக்கள் மோடி, அண்ணாமலை’ நோட்டாவுடன்தான் பாரதிய ஜனதா போட்டி: கரூர் எம்பி சுரீர் appeared first on Dinakaran.

Tags : Bharatiya Janata Party ,Modi ,Annamalai ,Vasul Rajas' ,Karur ,Surir ,Dindigul ,Jyotimani ,BJP ,Tamil Nadu ,Dindigul district ,
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி