×

வடசென்னை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

தண்டையார்பேட்டை: வடசென்னை பகுதிகளில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தி வந்த ஆசாமி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை தெருவை சேர்ந்தவர் திருமலை (50). இவர், வடசென்னை பகுதியான தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம், காசிமேடு, கொடுங்கையூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடை, கூட்டுறவு கடைகளில் அரிசி மூட்டை களை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை செங்குன்றம் பகுதியில் குடோனில் பதுக்கி வைத்து ஆந்திராவில் விற்று வந்துள்ளார்.

இதுகுறித்து பட்டரைவாக்கத்தில் உள்ள குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில் போலீசார், கடந்த மாதம் ஆர்.கே.நகர் பகுதியில் சோதனை நடத்தியபோது திருமலையின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து குடோனை சோதனையிட்டபோது ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. குடோனில் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவான திருமலையை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில் கொடுங்கையூர் எழில்நகர் பகுதியில் திருமலை பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமை யிலான போலீசார் நேற்று சுற்றிவளைத்து திருமலையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர் மீது பல்வேறு அரிசி கடத்தல் வழக்குகள் இருப்பதால் குண்டர்சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி திருமலை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல்சிறையில் அடைக்கப்பட்டார்.

The post வடசென்னை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : North Chennai ,Thandaiyarpet ,Asami ,Thirumalai ,Sundarampillai Street ,Thandaiarpet ,Vannarappet ,Korukuppet ,Tiruvottiyur ,Rayapuram ,Kasimedu ,Kodunkaiyur ,Vyasarpadi ,
× RELATED ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில...