×

பாஜகவுக்கு பெரும் ஏமாற்றம்.. மகாராஷ்ட்ராவில் I.N.D.I.A. கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்..!!

மகாராஷ்ட்ரா: மகாராஷ்ட்ராவில் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி, உத்திரப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் மகாராஷ்ட்ராவில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெறவில்லை.

இந்த நிலையில் மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ், சிவசேனா மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு கூட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்ட்ராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 தொகுதிகளிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post பாஜகவுக்கு பெரும் ஏமாற்றம்.. மகாராஷ்ட்ராவில் I.N.D.I.A. கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,I.N.D.I.A. ,Delhi ,Uttar Pradesh ,Punjab ,Ariana ,Gujarat ,Maharashtra ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்