×

சென்னை போரூர் அடுத்த மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

சென்னை: சென்னையை அடுத்த போரூர் அருகே கிருகம்பாக்கம் பகுதியில் செயல்பட கூடிய தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து பள்ளி நிர்வாகம் உடனடியாக பள்ளி அருகே இருக்கக்கூடிய மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து ஆவடி ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே சமூக விரோதிகள் இந்த வெடிகுண்டு மிரட்டல் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உடனடியாக அந்த பள்ளியில் தற்போது வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் 2 வாகனங்களில் 20க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் தீவிரசோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இன்று பள்ளி வேலை நாள் என்பதால் மாணவர்கள் அனைவரும் வகுப்பறையிலிருந்து வெளியேற்றப்பட்டு அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்ட நிலையில் மாணவர்கள் அனைவரும் பள்ளியின் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளனர். 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கக்கூடிய இந்த பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் அது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள் தற்போது தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

The post சென்னை போரூர் அடுத்த மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.

Tags : MANGAD ,BORUR, CHENNAI ,Chennai ,Krigambakkam ,Borur ,Mangadu police station ,Mangadu, Chennai Borur ,
× RELATED போரூரில் பரபரப்பு; பாத்திரத்தில் தலை...