×

தஞ்சாவூர் பெரியகோவில் அருகே உரக்கிடங்கில் தீ: ஆயிரம் டன் இயற்கை உரங்கள் தீயில் எரிந்து நாசம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில் அருகே உரக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது தீ விபத்தில் ஆயிரம் டன் இயற்கை உரம் எரிந்து சேதமானது. தஞ்சாவூர் பெரிய கோவிலை அடுத்த ஸ்ரீனிவாசபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இயற்கை உரம் உற்பத்தி செய்யும் கிடங்கு உள்ளது. பலத்த காற்று காரணமாக உரக்கிடங்கில் ஏற்பட்ட தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் ஆயிரம் டன் உரம் எரிந்து நாசமானதாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை தீ விபத்து

புதுக்கோட்டையில் நகராட்சிக்கு சொந்தமான ஷண்முகா நகரில் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. காற்றில் வேகமாக பரவிய தீ பல ஆதி உயரத்திற்கு கொழுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு நிலவியது. நிகழ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 2 அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தேனி

தேனீ மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பல அறிய வகை மரங்கள் மற்றும் மூலிகைகள் எரிந்து நாசமாகின. தேவனானம்பட்டி வனத்துறையினர் வனத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே நீலகிரி, கூடலூரை அடுத்த மசினகுடி வனப்பகுதியில் ஏற்படும் அபாயம் உள்ளதால் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 4 இடங்களில் மரங்களில் பரண்களை அமைத்து கட்டு தீ ஏற்படாமல் இருக்க தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

The post தஞ்சாவூர் பெரியகோவில் அருகே உரக்கிடங்கில் தீ: ஆயிரம் டன் இயற்கை உரங்கள் தீயில் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Urakitang ,Tanjavur Peryako ,Thanjavur ,Urakidang ,Tanjavur Periyago ,Thanjavur Great Temple ,Srinivasapuram ,Tanjavur Periyako ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100%...