×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்தநாள் இன்று கொண்டாட்டம்.. நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறார். இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று, கலைஞரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அதன்பின், தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெறுகிறார்.

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எக்ஸ் தளத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த், தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து
சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் விஜய் வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கார்கே வாழ்த்து
71-வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என்று அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேரள முதல்வர்
71-வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிய்வத்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் நீடித்த மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியத்துடன் தொடர் வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை வாழ்த்து
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்தநாள் இன்று கொண்டாட்டம்.. நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Rajinikanth ,Kamal Haasan ,Vijay ,Chennai ,People's Justice Center ,President ,M.K.Stalin ,Tamil Nadu ,M. K. Stalin ,Gopalapuram ,
× RELATED செல்பி எடுத்தாலும் கட்டணுமா? ஜிஎஸ்டி...