×

புள்ளம்பாடி ஒன்றியத்தில் இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் பொதுமக்களிடம் துண்டுபிரசுரம்

 

லால்குடி, மார்ச் 1: லால்குடி சட்டமன்ற தொகுதி புள்ளம்பாடி தெற்கு ஒன்றியத்தில் இல்லம்தோறும் ஸ்டாலின்குரல் தமிழக அரசு செய்த சாதனை பட்டியல்களை பொது மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ஸ்டாலின் குரல் திண்ணை பிரசாரம் முதன்மை செயலாளரும், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆணைக்கினங்க திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆலோசனைபடி ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தலைமையில் ஆலம்பாடி மேட்டூர், விரகாலூர், திண்ணக்குளம், ஆலம்பாக்கம், வடுகர்பேட்டை ஆகிய ஊராட்சிகளில் நடந்தது.

இந்நிகழ்வில் மாவட்ட பிரதிநிதிகள் ராமர், சண்முகம், சுகுமார், ஒன்றிய பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ், கிளை செயலாளர்கள் செல்வராஜ், விரகாலூர் ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர் சூசை அந்தோணி, வடுகர்பேட்டை பவுல் பட்டயதாரர் மற்றும் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post புள்ளம்பாடி ஒன்றியத்தில் இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் appeared first on Dinakaran.

Tags : Stalin ,Pullambadi ,Lalgudi ,Lalgudi Assembly Constituency ,Pullambadi South Union ,Tamil Nadu government ,Principal Secretary ,Department of Urban Development ,
× RELATED நாளை ஏப்.14 அம்பேத்கர் பிறந்த நாளில்...