×

காவல்துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்

 

திருச்சி, மார்ச் 1: திருச்சி மாநகர காவல்துறை சார்பில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட ‘சமூக நல்லிணக்க விழிப்புணா்வு கூட்டம்’ நடந்தது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின்பேரில், காந்திமார்க்கெட், பாலக்கரை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சங்கிலியாண்டபுரம் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மற்றும் திருச்சி மாநகர போலீஸ்துறை சார்பில் ‘சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்’ நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர் அன்பு (வடக்கு), சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், போலீஸ் காந்தி மார்க்கெட் சரக உதவி கமிஷனர்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நமது அரசியல் அமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது எனவும், தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர் மீதும் தொிந்தோ, தொியாமலோ சமூக வேற்றுமையை, மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க கூடாது.

அரசியல் அமைப்பின் அடிப்படை கருத்திற்கு இணங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் இருப்பது பொதுமக்களாகிய நமது கடமையாகும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினா் சமூக முன்னேற்றத்திற்காக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நல திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. இந்த சமூக நல்லிணக்க விழிப்புணா்வு கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post காவல்துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : harmony ,Trichy ,Community Harmony Awareness ,Trichy Municipal Police ,Commissioner ,Kamini Uttara ,Gandhi Market ,Palakkarai Police ,Sangyanandapuram ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் பகுதி பள்ளிகளில் சமூக நல்லிணக்க விழா