×

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனையகத்தில் பாரம்பரிய நெல் ஏலம்

 

கும்பகோணம், மார்ச் 1: கும்பகோணம் அருகே பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாரம்பரிய நெல் ஏலம் விடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாரம்பரிய நெல் ஏலம் கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் நடைபெற்றது. இந்த மறைமுக ஏலத்தில் 27 குவிண்டால் கருப்பு கவுனி கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.72.50க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.70க்கும், சராசரி விலையாக ரூ.72.20க்கும் விலை போனது. இதன் மூலம் ரூ.2 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. இதில் சென்னை, திருச்சி, திருவாரூர் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த தனியார் வியாபாரிகள் கலந்து கொண்டனர். மேலும் ஒவ்வொரு புதன்கிழமை தோறும் பாரம்பரிய நெல் ரகங்களுக்கு ஏலம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனையகத்தில் பாரம்பரிய நெல் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Papanasam Regulation Market ,Kumbakonam ,Papanasam Regulation Hall ,Babanasam Regulation Hall ,Thanjavur District ,Superintendent ,Tatsaini ,Papanasam Regulatory Market ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் அரசு மருத்துவமனையில்...