×

பொன்னமராவதி அருகே வாழைக்குறிச்சி அரசு பள்ளி ஆண்டு விழா

 

பொன்னமராவதி,மார்ச் 1: பொன்னமராவதி அருகே உள்ள வாழைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி மாணவ, மாணவிகளின் தனித்திறன் நாடகம் மற்றும் நடனம் மகிழ்ச்சியாய் கண்டு ரசித்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொன்னமராவதி அருகே உள்ள வாழைக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களின் கண்கவர் தணித்திறன், மற்றும் நடன நிகழ்ச்சியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு பொருட்களும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது. மாணவர்கள் நாடகம், பாடல்கள் மூலமாக விழிப்பணர்வு ஏற்படுத்தும் வகையில் விவசாயம் பாதுகாப்பு, காற்று மாசுபடுதல் தடுப்பு, நீதிசார் கதைகளான சிலப்பதிகாரம் நாடகம், வில்லுப்பாட்டு, பரத நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடிப்பின் மூலமாக வெளிப்படுத்தினர். இப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா கல்வித்துறை அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களை ஊக்கப்படுத்தினர்.

The post பொன்னமராவதி அருகே வாழைக்குறிச்சி அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Vazaikurichi Govt School ,Ponnamaravathi ,Ponnamaravati ,Vazaikurichi Panchayat Union Middle School ,Vazaikurichi ,Vazaikurichi Govt ,
× RELATED பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் கோலாட்டம் அடித்து வழிபாடு