×

அன்னவாசல் அருகே தைல மரக்காட்டில் திடீர் தீ

 

விராலிமலை, மார்ச் 1: அன்னவாசல் காவல் நிலையம் பின்புறம் உள்ள தைல மரக்காட்டில் காட்டு தீ பற்றி எரிந்துள்ளது தகவலறிந்து நிகழ்விடம் சென்ற தீயணைப்பு வீரர்கள் நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் காவல் நிலையம் பின்புறம் சுமார் 3 ஏக்கரில் அரசுக்கு சொந்தமான தைலம் மரக்காடு உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை இந்த காட்டில் திடீரென்று புகை வெளியேறி சுற்றுப்பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளது.

இதையடுத்து இது குறித்து தகவலை அப்பகுதியை சேர்ந்தவர்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்ததை தொடர்ந்து நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று பார்த்தபோது காட்டுக்குள் காட்டு தீ பற்றி எரிந்துள்ளது. இதை தொடர்ந்து தீயணைப்பு வாகனத்தில் இருந்த நீரை குழாய் மூலம் பீச்சி அடித்தும்.. காட்டில் வளர்ந்து நின்ற இலை தழைகளைக் கொண்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டு தீயை அணைத்ததால் மேலும், தீ அருகில் உள்ள வயல்வெளிக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.

The post அன்னவாசல் அருகே தைல மரக்காட்டில் திடீர் தீ appeared first on Dinakaran.

Tags : Thala tree forest ,Annavasal ,Viralimalai ,Annavasal Police Station ,Pudukottai District ,Dinakaran ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா