×

காரிப்பட்டி அருகே கோயிலில் கேமரா உடைப்பு 7 பேர் மீது வழக்கு

சேலம், மார்ச்1: சேலம் அருகேயுள்ள காரிப்பட்டி ஏரிபுதூரில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த ஆண்டு நடந்த பண்டிகையின்போது தகராறு ஏற்பட்டது. மேலும் சிலர் அங்கிருந்து மது குடிப்பதும், கிரிக்கெட் விளையாடுவதுமாக இருந்து வந்தனர். இதையடுத்து கோயிலின் பாதுகாப்பு கருதி, தர்ம கர்த்தாவான நாராயணசாமி (65) ₹60 ஆயிரம் செலவில் கோயிலில் கண்காணிப்பு கேமராவை வைத்தார்.இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சிலர் அடித்து உடைத்துள்ளனர். இதுகுறித்து காரிப்பட்டி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த விஜய், சவுந்தர், பிரசாத், ஆகாஸ், சுபாஷ், சபரிநாதன், சின்னவன் உள்பட மேலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post காரிப்பட்டி அருகே கோயிலில் கேமரா உடைப்பு 7 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Garibatti ,Salem ,Mariyamman ,Garipatty Eeriputhur ,Karipatti ,
× RELATED சேலம் பனமரத்துப்பட்டியில் இரவுப்...