×

நாமக்கல் தாலுகா பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

நாமக்கல், மார்ச் 1: நாமக்கல் தாலுகா பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை, கலெக்டர் ஆய்வு செய்தார். நாமக்கல் தாலுகா தும்மங்குறிச்சி, ஆவல்நாய்க்கன்பட்டி, கல்யாணி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, கலெக்டர் உமா நேரடி ஆய்வு செய்தார். ஆவல்நாய்க்கன்பட்டியில் தொகுதி மேம்பாட்டு நிதி ₹14 லட்சம் மதிப்பீட்டில், கரையான்புதூர் முதல் ஆவல்நாய்க்கன்பட்டி வரை சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார். தொடர்ந்து, தும்மங்குறிச்சி மற்றும் கல்யாணி பகுதியில் நில வகைப்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளின் விபரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின் போது, தாசில்தார் சீனிவாசன், பிடிஓ தனம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post நாமக்கல் தாலுகா பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Namakkal Taluk ,Namakkal ,Uma ,Tummangurichi ,Avalnaikanpatti ,Kalyani ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடிகளில் கலெக்டர் நேரில் ஆய்வு