×

ஓசூர் அருகே களை கட்டிய எருதாட்ட விழா திரளான மக்கள் கண்டு ரசித்தனர்

ஒசூர், மார்ச் 1: ஓசூர் அருகே பெரிய முத்தாலியில் எருதாட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது. ஓசூர் அருகே பெரிய முத்தாலி கிராமத்தில், நேற்று பாரம்பரிய எருதாட்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் சூளகிரி, ஓசூர், பாகலூர், பேரிகை மற்றும் ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான காளைகளை அழைத்து வந்திருந்தனர். தொடர்ந்து வாடிவாசலில் இருந்து வண்ண வண்ண தடுக்கைகளுடன் ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டனர். கூட்டத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசு பொருட்களையும், தடுக்கைகளையும் கைப்பற்றி ஆர்ப்பரித்தனர். அப்போது, காளைகள் முட்டி தள்ளியதில் 10க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். பாரம்பரிய எருதுவிடும் விழாவினையொட்டி அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

The post ஓசூர் அருகே களை கட்டிய எருதாட்ட விழா திரளான மக்கள் கண்டு ரசித்தனர் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Periya Muthali ,Choolagiri ,Bagalur ,Barikai ,Rayakottai ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு