×

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்

குன்றத்தூர், மார்ச் 1: குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், கம்பர் தெருவை சேர்ந்தவர் நிஷாந்த் (23). இவர், அதே பகுதியில் லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே 5 பேர் கொண்ட கும்பல் நிஷாந்த்தை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில்,அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குற்றவாளிகள் 5 பேரும் அருகிலுள்ள ஏதாவது நீதிமன்றத்தில் ஆஜர் ஆகக்கூடும் என்பதால், செங்கல்பட்டு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய நீதிமன்றங்களில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதற்கு பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

The post ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kunradthur ,Nishant ,Gambar Street ,Thirumudivakkam, Kunradthur ,Nishanth ,
× RELATED குன்றத்தூர் அருகே குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து.!!