×

மபியில் வாகனம் கவிழ்ந்து 14 பேர் பலி

திண்டோரி: மத்திய பிரதேசத்தில் ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலியான நிலையில், 21 பேர் படுகாயமடைந்தனர். மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டம் ஷாபுரா பகுதியில் நடந்த ‘கோத் பாராய்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள், தங்களது கிராமத்திற்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் ‘பிக்கப்’ வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வாகனம், திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர். மேலும் 21 பேர் படுகாயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களையும், படுகாயமடைந்தவர்களையும் மீட்புப் படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post மபியில் வாகனம் கவிழ்ந்து 14 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Mabi Tindori ,Madhya Pradesh ,Koth Parai ,Shapura ,Tindori district ,Mabi ,
× RELATED தேர்தல் விவாத நிகழ்ச்சியில் பாஜ...