×

சில்லிபாயின்ட்…

* சென்னையில் நடைபெற்று வரும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன. சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனல், போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

* பார்முலா 1 கிராண்ட் பிரீ கார் பந்தயத்தின் இணைய வழி நேரடி ஒளிபரப்பு உரிமத்தை FanCode பெற்றுள்ளது.

* மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்க உள்ள 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் இணைந்துள்ளார். காயம் காரணமாக அவதிப்படும் கே.எல்.ராகுல் இடம் பெறவில்லை. ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், மும்பையுடன் ரஞ்சி பைனலில் (மார்ச் 2-6) மோதும் தமிழ்நாடு அணியில் களமிறங்குவதற்காக விடுவிக்கப்பட்டுள்ளார்.

* ஆஸ்திரேலிய அணியுடன் வெலிங்டன் பேசின் ரிசர்வ் மைதானத்தில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில், டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 85 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 279 ரன் குவித்துள்ளது. ஸ்மித் 31, கவாஜா 33, மிட்செல் மார்ஷ் 40, கேப்டன் கம்மின்ஸ் 16, அலெக்ஸ் கேரி 10 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேமரான் கிரீன் 103 ரன் (155 பந்து, 16 பவுண்டரி), ஜோஷ் ஹேசல்வுட் (0) களத்தில் உள்ளனர். நியூசி. பந்துவீச்சில் ஹென்றி 4, ஓ‘ரூர்கே, ஸ்காட் தலா 2, ரச்சின் 1 விக்கெட் வீழ்த்தினர்.

* ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய யுவென்டஸ் கால்பந்து அணி வீரர் பால் போக்பாவுக்கு, போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post சில்லிபாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Sillypoint… ,England ,Australia ,Cricket World Cup ,Chennai ,Sri Ramachandra Medical College ,Borur ,Sillypoint ,Dinakaran ,
× RELATED சில்லிபாயின்ட்..