×

சென்னை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் சிறப்பு கடன் தீர்வு திட்டம்

சென்னை: சென்னை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பண்ணை சாரா கடன்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மிருணாளினி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுள்ள சிறு வணிக கடன், போக்குவரத்து கடன், கைத்தறிக்கடன், தொழிற்கடன், வாணிப கடன்கள், பத்திர ஈட்டு கடன்கள், வீடு கட்டும் கடன்,

மகளிர் சுயஉதவி குழு கடன்கள், ஆடவர் சுய உதவிக்குழு கடன்கள், கூட்டுப்பொறுப்புக்குழு கடன்கள், தாட்கோ, டாம்கோ மற்றும் டாப்செட்கோ போன்ற கடன்களில் 31.12.2022 அன்று கடனை திரும்ப செலுத்த வேண்டிய காலக்கெடு முழுமையாக முடிவடைந்து தவணை தவறி நிலுவையில் உள்ள அனைத்து பண்ணைசாரா கடன்கள் இத்திட்டத்தில் தகுதி பெறும்.

இத்திட்டத்தில் பயன்பெற கடன்தாரர், கணக்கிடப்பட்ட நிலுவைத்தொகையில் 25 சதவீத தொகையை அரசாணை வெளியிடப்பட்ட நாளான 13.12.2023 முதல் மூன்று மாதத்திற்குள் செலுத்தி வங்கி சங்கத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். மீதமுள்ள 75 சதவீத தொகையை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நாளில் இருந்து 6 மாத காலத்திற்குள் அதிகபட்சமாக 6 தவணைகளுக்குள் செலுத்த வேண்டும்.

கடன் வழங்கப்பட்ட தேதியில் இருந்து ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாள் முடிய அசலுக்கு 9 சதவீத சாதாரண வட்டி வசூலிக்கப்படும். கூடுதல் வட்டி, அபராதவட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இத்திட்டம் செப்டம்பர் 2024 வரை அமலில் இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சென்னை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் சிறப்பு கடன் தீர்வு திட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai District ,Co ,Societies ,Chennai ,Chennai District Co- ,Zonal ,Additional Registrar ,Mrinalini ,Tamil Nadu State Chief Co-operative Bank ,Chennai District Co ,Dinakaran ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில்...