×

இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை கருத்து

மதுரை: நவீன காலத்தில் இன்றைய இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. நூலகங்களில் நிரம்பும் புத்தகங்கள்தாள் வளமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் நூலக வரியை, நூலகத்துறையிடம் வழங்கி புத்தகங்கள் வாங்க உத்தரவிடக் கோரிய வழக்கில், 2020-23-க்கான புத்தகங்களை 6 மாதத்துக்குள் அரசு கொள்முதல் செய்து அதனை நூலகங்களுக்கு வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்கும் நூலக வரியை முறையாக பயன்படுத்த வேண்டும் ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

The post இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை கருத்து appeared first on Dinakaran.

Tags : iCourt Madurai ,Madurai ,Madurai High Court ,Dinakaran ,
× RELATED கஞ்சா வழக்கு..மக்களுக்கு சேவை புரியும்...