×

திடீர் மாரடைப்பு காரணமாக ஹாலிவுட் காமெடி நடிகர் மரணம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த ஸ்டாண்ட்-அப் காமிக் மற்றும் ஹாலிவுட் காமெடி நடிகரான ரிச்சர்ட் லூயிஸ் (76), கடந்த சில நாட்களாக வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்ததாக கூறப்படுகிறது. லூயிஸின் மரணம் குறித்து அவரது விளம்பரதாரர் ஜெஃப் ஆபிரகாம் வெளியிட்ட பதிவில், ‘லூயிசின் மனைவி ஜாய்ஸ் லாபின்ஸ்கி கேட்டுக் கொண்டதன் பேரில், அவரது குடும்பத்தினரின் தனியுரிமை பேணும் பொருட்டு ரிச்சர்ட் லூயிஸின் மரண செய்தியை தெரிவித்தனர்’ என்று கூறியுள்ளார்.

1947ல் புரூக்ளினில் பிறந்து நியூ ஜெர்சியில் வளர்ந்த லூயிஸ், 1970ம் ஆண்டுகளில் நியூயார்க் நகரத்தில் உள்ள கிளப்களில் நடித்து பிரபலமானார். பின்னர் நகைச்சுவை தொடர்களில் நடித்து ஹாலிவுட் படங்களில் அறிமுகமானார். லூயிஸின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post திடீர் மாரடைப்பு காரணமாக ஹாலிவுட் காமெடி நடிகர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Hollywood ,Los Angeles ,Richard Lewis ,
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்