×

போலி வீடியோ தயாரித்து மிரட்டல்: முதலமைச்சரின் ஆணைப்படி துரிதமாக சட்ட நடவடிக்கைக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி

மயிலாடுதுறை: போலி வீடியோ குறித்து காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் முதலமைச்சரின் ஆணைப்படி துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்ததற்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளது. துரிதமாக நடவடிக்கை எடுத்து தங்களையும் தருமபுரம் ஆதீனம் மடத்தையும் காத்த காவல்துறைக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளது. ஆபாச வீடியோவை வெளியிடப் போவதாக தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி பணம் பறிக்க முயன்ற பாஜக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். தருமபுர ஆதீன மடத்துக்குள் கடந்த சில நாட்களாக சில அடையாளம் தெரியாத நபர்கள் சேர்ந்து போலி வீடியோ தயாரித்து மிரட்டல் விடுத்து வந்தநிலையில் கைது செய்யப்பட்டனர்.

The post போலி வீடியோ தயாரித்து மிரட்டல்: முதலமைச்சரின் ஆணைப்படி துரிதமாக சட்ட நடவடிக்கைக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி appeared first on Dinakaran.

Tags : Dharampuram Atheenam ,Chief Minister ,Mayiladuthurai ,Tharumapuram Atheenam ,Dharumapuram Atheenam ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...