×

பாகற்காய் சம்பல்

தேவையான பொருட்கள்

பாகற்காய் – அரை கிலோ
தக்காளி – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – 1 கொத்து (பொடியாக நறுக்கியது)

செய்முறை

வெங்காயத்தை மெல்லியதாக, நீளமாக அரிந்து உதிர்த்து வைக்கவும். தக்காளி, பச்சை மிளகாயை வட்டமாக நறுக்கி வைக்கவும். பாகற்காயைக் கழுவி நீளமாக இரண்டாக வெட்டி, மெல்லியதாக (அரைவட்டமாக) நறுக்கி வைக்கவும். நறுக்கிய பாகற்காயுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும். பின்னர் பாகற்காயில் உள்ள நீரை வடித்துவிட்டு, வாணலியில் எண்ணெயைக் காய விட்டு, காயை சிறிது சிறிதாகப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பேப்பர் டவலில் பரவலாகப் போட்டு நன்கு எண்ணெயை வடியவிடவும். பிறகு தக்காளியை லேசாக வதக்கிக் கொள்ளவும். பின்னர் பொரித்து வைத்த பாகற்காய், தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். கசப்பு இல்லாத சுவையான சம்பல் ரெடி!

The post பாகற்காய் சம்பல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED தள்ளாத வயதிலும் கவனம் ஈர்த்த தலையாய...