×

மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது; ஐகோர்ட் தீர்ப்பு சரியே.. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம்கோர்ட் பாராட்டு

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். அப்போது; மக்கள் பயன்படுத்தும் நீரிலும் ஸ்டெர்லைட் கழிவுகள் கலந்துள்ளது உறுதியாகி உள்ளது.

கொட்டப்பட்ட காப்பர் ஸ்லாக்குகளில் அதிக அளவிலான ஆர்சனிக் அளவு உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதால் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஜிப்சம் சாம்பல் கழிவு, கருப்பு வண்ணத்திலான காப்பர் ஸ்லாக்குகளை உச்சநீதிமன்றத்தில் காண்பித்து வாதிட்டார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்; ஸ்டெர்லைட் ஆலை 20 ஆண்டுகளாக உரிய அனுமதி மற்றும் உரிமங்களை புதுப்பிக்காமல் செயல்பட்டது. 9 ஆண்டுகளாக உரிய அனுமதியின்றி கழிவுகளை கொட்டி வைத்ததாக ஸ்டெர்லைட் ஆலை மீது தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விதிகளை மீறி செயல்படுவதை வாடிக்கையாக வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, வாதங்களை கேட்ட பிறகு உடனடியாக தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

மீண்டும் மீண்டும் விதிகளை மீறி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டது நிரூபிக்கப்பட்டதால் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது. கடந்த முறை வழக்கு விசாரணையின்போது நடுநிலையான நிபுணர் குழுவை அமைத்து ஆலையை திறப்பது பற்றி ஆய்வு செய்யலாம் என யோசனை கூறியிருந்தது. ஆலையை மூடுவது நடவடிக்கையாக இருக்கக் கூடாது என்றாலும் தொடர் விதிமீறல், பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஆலையை மூடியது சரியே. நாட்டின் வளர்ச்சிக்கு ஸ்டெர்லைட் பங்களிப்பை செய்து வந்தாலும் தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம், நல்வாழ்வுக்கே அதிக முக்கியத்துவம் தர முடியும்.

ஸ்டெர்லைட் வழக்கில் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டே உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டதாக உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு தீர்ப்பளித்திருந்தது.

The post மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது; ஐகோர்ட் தீர்ப்பு சரியே.. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம்கோர்ட் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : iCourt ,Supreme Court ,Chennai High Court ,Delhi ,Vedanta ,Chief Justice ,D. Y. Chandrasuit ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் கோவிலில் பொது தீட்சிதர்கள்...