×
Saravana Stores

அவமதிப்பு வழக்கு: அண்ணா பல்கலை. பதிவாளர் ஐகோர்ட்டில் ஆஜர்

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அண்ணா பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியருக்கு ஓய்வூதிய பலன் வழங்காததை அடுத்து அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாததை அடுத்து உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு, நோட்டீசில் பெயர் பிழையால் அன்று ஆஜராகவில்லை. மனுதாரர் மீது லஞ்ச வழக்கு நிலுவையில் உள்ளதால் பணிக்கொடை தொகையை வழங்க இயலாது என பதிவாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், வழக்கு விசாரணையை ஜூலை 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post அவமதிப்பு வழக்கு: அண்ணா பல்கலை. பதிவாளர் ஐகோர்ட்டில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Anna University ,Azhar ,iCourt ,Chennai ,Chennai High Court ,Supreme Court ,Aycourt ,Dinakaran ,
× RELATED கோவையில் அண்ணா பல்கலைக்கழகத்தில்...