×

20 ஆண்டுகளாக மாசு ஏற்படுத்துகிறது ஸ்டெர்லைட் ஆலை: தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை 20 ஆண்டுகளாக உரிய அனுமதி மற்றும் உரிமங்களை புதுப்பிக்காமல் செயல்பட்டதாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையின் போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். அப்போது; மக்கள் பயன்படுத்தும் நீரிலும் ஸ்டெர்லைட் கழிவுகள் கலந்துள்ளது உறுதியாகி உள்ளது. கொட்டப்பட்ட காப்பர் ஸ்லாக்குகளில் அதிக அளவிலான ஆர்சனிக் அளவு உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதால் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஜிப்சம் சாம்பல் கழிவு, கருப்பு வண்ணத்திலான காப்பர் ஸ்லாக்குகளை உச்சநீதிமன்றத்தில் காண்பித்து வாதிட்டார்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்; ஸ்டெர்லைட் ஆலை 20 ஆண்டுகளாக உரிய அனுமதி மற்றும் உரிமங்களை புதுப்பிக்காமல் செயல்பட்டது. 9 ஆண்டுகளாக உரிய அனுமதியின்றி கழிவுகளை கொட்டி வைத்ததாக ஸ்டெர்லைட் ஆலை மீது தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விதிகளை மீறி செயல்படுவதை வாடிக்கையாக வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

The post 20 ஆண்டுகளாக மாசு ஏற்படுத்துகிறது ஸ்டெர்லைட் ஆலை: தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Delhi ,Vedanta ,Supreme Court ,Dinakaran ,
× RELATED ஜாபர்சேட் மனைவி மீதான குற்றப்பத்திரிகை ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு