×

அமைதியின்ைமயால் ரூ.800 கோடி வருவாய் இழப்பு; மணிப்பூர் கலவரத்தில் 10,000 எப்ஐஆர் பதிவு: பேரவையில் ஆளுநர், முதல்வர் தகவல்

இம்பால்: மணிப்பூரில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளதால் நடப்பாண்டில் மட்டும் ரூ. 800 கோடி அளவிற்கு வரி வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக 10,000 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணிப்பூரில் மாநில சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், அப்போது முதல்வர் பிரேன் சிங் பேசுகையில், ‘மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மாநிலத்தின் வரி வருவாயில் இழப்பு அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் சுமார் ரூ.800 கோடி அளவிற்கு வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தொடரும் கலவரத்தால் மாநிலத்தின் நிதித் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ளது’ என்றார். முன்னதாக பேரவையில் ஆளுநர் அனுசுயா உய்கே ஆற்றிய உரையில், ‘மணிப்பூரில் கடந்த ஆண்டு மே 3ம் தேதி முதல் நடந்த கலவரத்தில் இதுவரை 219 பேர் பலியாகியுள்ளனர். முன்ெனச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட 1,87,143 பேர் உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். மொத்தம் 10,000 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 29 வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிது. ஒரு வழக்கை என்ஐஏ விசாரிக்கிறது. பாலியல் புகாரால் பாதிக்கப்பட்ட ெபண்களுக்கு உரிய நீதியை பெற்றுத் தரப்படும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயுதக் குழுக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த மாநில அரசு தயாராக உள்ளது’ என்றார்.

The post அமைதியின்ைமயால் ரூ.800 கோடி வருவாய் இழப்பு; மணிப்பூர் கலவரத்தில் 10,000 எப்ஐஆர் பதிவு: பேரவையில் ஆளுநர், முதல்வர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Governor ,Chief Minister ,Assembly ,Imphal ,Manipur ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி நிர்வாகம் சீர்குலைய துணை...