×

இரட்டை இலை கேட்டு தேர்தல் ஆணையத்தை நாட உள்ளோம்: வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி

சென்னை: மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை நாட உள்ளோம் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கைகோர்த்துள்ளனர். அதன்படி, இருவரும் ஒன்றாக இணைந்து இந்த மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளனர். பாஜக கூட்டணியில் தொடர்வதாக ஓ.பி.எஸ். அணி அறிவித்துள்ள நிலையில் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை எழும்பூரில் ஆலோசனை நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் தொண்டர்களிடம் பேசினார். இந்நிலையில் ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்; மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை நாட உள்ளோம். தேர்தல் ஆணையத்தில் முறையிட்டால் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

The post இரட்டை இலை கேட்டு தேர்தல் ஆணையத்தை நாட உள்ளோம்: வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Electoral Commission ,Vaithilingam ,Chennai ,OPS ,Lok Sabha ,Election Commission ,Chief Minister ,O. PANIRSELVAM ,AMUGA ,SECRETARY GENERAL ,DTV ,Dinakaran ,
× RELATED சென்னை உள்ளிட்ட இடங்களில்...