×

சென்னையில் காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக 25 கம்பெனி மத்திய ஆய்த பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்க்கும் நம்பிக்கை வளர்ப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காகவும், மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.

அதில் 15 கம்பெனி மத்திய ஆய்த பாதுகாப்புபடையினர் நாளையும், 10 கம்பெனி மத்திய ஆய்த பாதுகாப்புபடையினர் 7-ம் தேதியும் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளனர். அந்த 25 துறை ராணுவப்படையினர் எந்தெந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது என்பது தொடர்பாகன ஆலோசனை என்பது தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது.

The post சென்னையில் காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Election Officer ,Satya Prada Chaku ,Chennai ,Sathya Prada Chaghu ,Chief Secretariat ,Company Central Armoured Security Forces ,Sathya Pradha Chaku ,
× RELATED செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில்...