×

திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும்: மதிமுக அவைத்தலைவர் அர்ஜூன்ராஜ் பேட்டி

சென்னை: திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என மதிமுக அவைத்தலைவர் அர்ஜூன்ராஜ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என்று அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல்., கொ.ம.தே.க.வுக்கு ஏற்கனவே தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் மதிமுக- திமுக இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. திமுக பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிமுக அவைத்தலைவர் அர்ஜூன்ராஜ்; ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். கடந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, இம்முறை தனிச் சின்னத்தில் போட்டியிட விருப்பம். திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் இவ்வாறு கூறினார்.

The post திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும்: மதிமுக அவைத்தலைவர் அர்ஜூன்ராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Arjunraj ,Dhimuka Aittalaidar Arjunraj ,Chennai ,Dinakaran ,
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...