×

இறுதிக்கட்டத்தில் திமுக கூட்டணி தொகுதி பங்கீடு: சிபிஐ, சிபிஎம், மதிமுகவுடன் இன்று ஒப்பந்தம்?

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இதில் ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும், நாமக்கல் தொகுதி கொமதேக கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மற்ற கட்சிகளுக்கும் விரைவில் தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுதி பங்கீடு தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் சற்றுநேரத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் சிபிஐ, சிபிஎம், மதிமுகவுடன் இன்று தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிஎம், சிபிஐ கட்சிகளுடன் திமுக இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது.

 

The post இறுதிக்கட்டத்தில் திமுக கூட்டணி தொகுதி பங்கீடு: சிபிஐ, சிபிஎம், மதிமுகவுடன் இன்று ஒப்பந்தம்? appeared first on Dinakaran.

Tags : DIMUKA ALLIANCE BLOCK ,CPI ,CBM ,MADIMUGA ,Chennai ,Dimuka Coalition ,Chennai Anna Vidyalaya ,Indian Union Muslim League ,Madmuka ,Komadega ,Communist Party of India ,Marxist ,Dinakaran ,
× RELATED டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான...