×

கோனியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

கோவை, பிப். 29: கோவையின் காவல் தெய்வமான பெரியகடை வீதி கோனியம்மன் கோயில் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. கோனியம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் 13-ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து 20-ம் தேதி கொடியேற்றம், அக்னிசாட்டு நடந்தது. தினமும் பெண்கள் கொடி கம்பத்திற்கு நீருற்றி வழிபட்டு வந்தனர். திருவிழா நாட்களில் அம்மன் புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், வெள்ளை யானை வாகன திருவீதி உலா நடந்தது.

The post கோனியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Koniamman Temple ,Chariot Kolagalam ,Coimbatore ,Periyakadai Veethi Koniyamman temple festival ,Koniamman temple festival ,Puchatu ceremony ,Agni Chattu ,
× RELATED அண்ணாமலை பிரசாரத்தில் பணம் விநியோகம்