×

லாட்டரி விற்றவர் கைது

ஈரோடு, பிப். 29: ஈரோடு வைராபாளையம், வாட்டர் ஆபிஸ் ரோட்டில் நேற்று முன் தினம் கருங்கல்பாளையம் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள டீ கடை ஒன்றின் அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், வைராபாளையம், நாட்ராயன் கோயில் வீதியைச் சேர்ந்த தினேஷ் (20) என்பதும், கேரள மாநில லாட்டரியை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லாட்டரி சீட்டுகள், ரூ.3 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

The post லாட்டரி விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Karungalpalayam ,Water Office Road ,Erode, Virapalayam ,Dinakaran ,
× RELATED பறக்கும் படை அதிகாரிகளின்...