×

வனபத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் விழா

ஈரோடு, பிப். 29: ஈரோடு கருங்கல்பாளையம் காவேரிக்கரையில் வனபத்ரகாளியம்மன், பஞ்சமுக நாகாத்தம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் நடப்பாண்டுக்கான பொங்கல் விழா கடந்த 13ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய விழாவான நேற்று, காவிரி ஆற்றுக்கு சென்று சக்தி கரகம் அழைத்தலும், அக்னி சட்டி எடுத்தலும், அழகு குத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து கெடா வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு பெரும் பூஜையும் நடந்தது.

இதையடுத்து கோயிலில் அன்னதானமும் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இன்று (29ம் தேதி) காவிரி ஆற்றுக்கு சென்று கரகம், கும்பம் விடுதலும், மஞ்சள் நீராடுதலும், அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. பின்னர் மறுபூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.

The post வனபத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் விழா appeared first on Dinakaran.

Tags : Vanabhatrakaliamman Temple Pongal Festival ,Erode ,Vanabhadrakaliamman ,Panchamuga ,Nagathamman ,Kaverikkara, Karungalpalayam, Erode ,Pongal festival ,Cauvery River ,Vanabhadrakaliamman Temple Pongal Festival ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!