×

சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் 290 பேர் கைது

புதுக்கோட்டை, பிப்.3: சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் புதன்கிழமை புதுக்கோட்டையில் நடத்திய முற்றுகை போராட்டத்தில் 270 பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட 290 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறையில் ஒரே பணியைச் செய்யும் ஆசிரியர்களுக்கு வேறு, வேறு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே கல்வித் தகுதி, ஒரே பதவிக்கு இரு வேறு ஊதியங்கள் வழங்கப்பட்டு வரும் முரண்பாட்டை சரிசெய்யக் கோரி பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சென்னை மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். தமிழ்நாடு அரசு போராடும் ஆசிரியர்களை அழைத்துப் பேசாமல் காலம் தாழ்த்துவதைக் கண்டித்தும், உடனடியாக அழைத்துப் பேச வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமை வகித்தார். நிர்வாகிகள் வேலுச்சாமி, சையது இப்ராம்சா, ஜனாகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 270 பெண் ஆசிரியர்கள் உட்பட 290 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

The post சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் 290 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Tamilnadu ,
× RELATED புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும்...