×

பேரூராட்சி மன்ற கூட்டம்

மல்லசமுத்திரம், பிப்.29: மல்லசமுத்திரம் பேரூராட்சியில், சாதாரண மன்ற கூட்டம் நேற்று நடந்தது. பேரூராட்சி மன்ற தலைவர் திருமலை தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன் (பொ) முன்னிலை வகித்தார். இதில் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தங்களது வார்டு பகுதியில் நிலவும் குறைகளை தெரிவித்து பேசினர். பஸ் நிலையத்திற்குள் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் இடையில் பொதுப்பாதை குறித்து கவுன்சிலர்கள் சசிகலா, தங்கமணி, முருகேசன், மேனகா, லட்சுமி, ஞான சௌந்தரி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து, பேரூராட்சி தலைவரிடம் மனு அளித்தனர். மேலும் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் மறறும் அடிப்படை வசதிகள் குறித்து 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post பேரூராட்சி மன்ற கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Mallasamutram Municipal Council ,Municipal Council ,President ,Thirumalai ,Municipal Executive Officer ,Rajasekaran ,P ,Dinakaran ,
× RELATED 70 தென்னங்கன்றுகள் வெட்டி சாய்ப்பு