×

காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்

மல்லசமுத்திரம், பிப்.29: மல்லசமுத்திரம் அம்பேத்கர் தெருவில் உள்ள விநாயகர் கோயிலில், நேற்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது. மல்லசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஜெகதீஷ் தலைமை தாங்கினார். டாக்டர் நிஷா அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா பரிசோதனை செய்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலு, ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

The post காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Mallasamudram ,Vinayagar Temple ,Ambedkar Street ,Mallasamutram ,Primary Health Center District ,Medical Officer ,Jagadish ,Dr. ,Nisha ,Dinakaran ,
× RELATED கோயில்களில் சிறப்பு வழிபாடு