×

வீரன் சுந்தரலிங்கம், வரதராசனார், இரட்டைமலை சீனிவாசன், முத்தரையர் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: டாக்டர் மு.வரதராசனார், இரட்டைமலை சீனிவாசன், பெரும்பிடுகு முத்தரையர் ஆகியோருக்கு சிலை மற்றும் மணி மண்டபமும், வீரன் சுந்தரலிங்கத்துக்கு குதிரையில் அமர்ந்திருக்கும் சிலையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ராணிப்பேட்டை நகரத்தில் ரூ.65.76 லட்சத்தில் அமைக்கப்பட்ட மு.வரதராசனார் திருவுருவ சிலையுடன் கூடிய குவிமாட அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தம், மேல்ஆத்தூர் சாலை அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான நேரு பூங்காவில் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள தியாகி அண்ணல் தங்கோ திருவுருவ சிலையை முதல்வர் திறந்து வைத்தார்.

ஆதிதிராவிட மக்கள் முன்னேற்றத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த இரட்டைமலை சீனிவாசனுக்கு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கத்தில் ரூ.2.17 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம், திருச்சியில் ரூ.1.48 கோடி செலவில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் மற்றும் நூலகம், நீதிக்கட்சியின் வைரத் தூண் என்று அழைக்கப்பட்ட சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்துக்கு திருச்சியில் ரூ.77.62 லட்சம் செலவில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், திரைப்படத் துறையிலும், பாரம்பரிய இசைத் துறையிலும் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு ரூ.79.39 லட்சம் செலவில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், தூத்துக்குடி மாவட்டம், கவர்னகிரியில் அமைந்துள்ள வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மார்பளவுச் சிலையை மாற்றி, ரூ.48 லட்சத்து 66 ஆயிரம் செலவில் குதிரையில் அமர்ந்து போர்புரிவது போன்று கம்பீர தோற்றத்துடன் கூடிய புதிய சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார்.

The post வீரன் சுந்தரலிங்கம், வரதராசனார், இரட்டைமலை சீனிவாசன், முத்தரையர் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Veeran Sundharalingam ,Varadarasanar ,Dudmamalai Srinivasan ,Mutharaiyar ,Chief Minister ,M.K.Stalin. ,CHENNAI ,M.K.Stalin ,Dr. ,M.Varatharasanar ,Dumvamalai Srinivasan ,Perumbiduku Mutharaiyar ,Veeran Sundaralingam ,M. Varadarasanar ,Ranipet ,Varadharasanar ,Dumimamalai Srinivasan ,
× RELATED ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில்...