×

நியோமேக்ஸ் ஏஜென்ட் தற்கொலை

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அண்ணாசாலை பகுதியில் வசிப்பவர் அந்தோணிசாமி (55). இவருக்கு மனைவி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முன்னாள் ராணுவ வீரரான இவர், நியோமேக்ஸ் நிறுவனத்தில் ஏஜென்ட்டாக இருந்துள்ளார். இவர் மூலமாக நியோமேக்ஸ் நிறுவனத்தில் சுமார் ரூ.6 கோடியை பல்வேறு தரப்பினர் முதலீடு செய்திருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் அந்தோணிசாமி தேவகோட்டையில் இயங்கிவரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஆண்டாவூரணியை சேர்ந்த ஏஜென்ட் சேவியர் என்பவர் மூலம் ரூ.1.50 கோடி முதலீடு செய்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நிறுவனத்திடம் இருந்து முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்று தரும்படி சேவியரிடம், அந்தோணிசாமி கேட்டுள்ளார். இதற்கு சேவியர் முறையாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அந்தோணிசாமி, திருப்புத்தூர் சாலையில் உள்ள அவரது எலக்ட்ரிக்கல் கடையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

The post நியோமேக்ஸ் ஏஜென்ட் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Neomax ,Devakottai ,Anthonysamy ,Annasalai ,Devakottai, Sivagangai district ,
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது