×

மணிப்பூரில் ஏஎஸ்பி கடத்தல் ஆயுத படையினர் போராட்டம்

இம்பால்: மணிப்பூரில் நேற்று முன்தினம் பெண்கள் தன்னார்வ குழு, அரம்பை தெங்கால் அமைப்பை சேர்ந்தவர்கள், மெய்பீஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் ஏஎஸ்பி அமித் குமாரை கடத்தி சென்றனர். மேலும் அவருடன் இருந்த காவலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தீவிர நடவடிக்கையினை தொடர்ந்து ஒரு சில மணி நேரங்களில் ஏஎஸ்பி மீட்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஏஎஸ்பியை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், பாதுகாப்பு பணியில் இருக்கும் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்துவதற்கு அனுமதிக்க கோரியும் போலீஸ் கமாண்டோக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 5 பள்ளத்தாக்கு மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் கமாண்டோக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post மணிப்பூரில் ஏஎஸ்பி கடத்தல் ஆயுத படையினர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Armed ,ASP ,Manipur ,Imphal ,Amit Kumar ,Arambai Tenggal ,Maypeace ,
× RELATED அரியலூரில் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு..!!