×

மேற்கு வங்க அரசின் நலத் திட்டங்களை காப்பி அடிக்கும் பாஜ மாநிலங்கள்: மம்தா குற்றச்சாட்டு

பங்குரா: மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளி சம்பவம் தொடர்பாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அங்கு செல்ல முயன்ற பாஜவினரை தடுத்த எஸ்பி ஜஸ்பிரீத் சிங்கை பாஜ மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி காலிஸ்தானி என கிண்டலாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜஸ்பிரீத் தெரிவித்தார்.

இந்நிலையில்,மேற்கு வங்கம்,பங்குராவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில்,‘‘பாஜ கட்சியினர் தலைப்பாகை அணிந்த சீக்கிய போலீஸ் அதிகாரியை பார்த்தால் அவரை காலிஸ்தானி என அழைக்கின்றனர். இதுதான் பாஜவின் உண்மையான முகமாகும். மேற்கு வங்க அரசின் நலத் திட்டங்களை பாஜ ஆட்சி செய்யும் பல மாநிலங்கள் காப்பி அடிக்கின்றன ’’ என்றார்.

The post மேற்கு வங்க அரசின் நலத் திட்டங்களை காப்பி அடிக்கும் பாஜ மாநிலங்கள்: மம்தா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,West Bengal government ,Mamata ,West Bengal ,Sandeshkali ,SP ,Jaspreet Singh ,Suvendu Adhikari Khalistani ,
× RELATED விஷ பாம்பை கூட நம்பலாம்; பாஜவை நம்ப முடியாது: மம்தா கடும் தாக்கு