×

ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்: 5 வெளிநாட்டினர் கைது

போர்பந்தர்: குஜராத் மாநிலம் போர்பந்தர் கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த படகு ஒன்று குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு முகமை விரைந்தது. படகை சுற்றி வளைத்து அவர்கள் சோதனை நடத்தினார்கள். இதில் படகில் இருந்த சுமார் 3,300 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. மேலும் கப்பலில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். பிடிபட்டவர்களிடம் எந்தவித ஆவணங்களும் இல்லை. இவர்கள் ஈரான் அல்லது பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போதைப்பொருள் கட்டுப்பாட்டு முகமை இயக்குனர் ஜெனரல் பிரதான் கூறுகையில்,‘‘பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.1330 முதல் ரூ.2000 கோடியாகும். நாட்டிலேயே கடல் மார்க்கமாக கடத்த முயன்று பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களில் இதுவே அதிகபட்சமாகும்’’ என தெரிவித்துள்ளார்.

The post ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்: 5 வெளிநாட்டினர் கைது appeared first on Dinakaran.

Tags : Porbandar ,Indian Navy ,Narcotics Control Agency ,Dinakaran ,
× RELATED அமைச்சர் மீது செருப்பு வீச்சு புதுசு இல்ல… பழசு… குஜராத்தில் பாஜ கதறல்