×

கஞ்சா கடத்தல் வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை..!!

விழுப்புரம்: 120 கிலோ கஞ்சாவை கடத்திய வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2020ல் விக்கிரவாண்டி சோதனைச்சாவடியில் ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கடத்திவரப்பட்ட 120 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த  வழக்கில் மதுரையைச் சேர்ந்த முருகானந்தம், பிரபாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் முருகானந்ததுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. பிரபாகரனுக்கு 3 ஆயுள் தண்டனை ரூ.3 லட்சம் அபராதம் விதித்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post கஞ்சா கடத்தல் வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை..!! appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Villupuram district court ,Andhra Pradesh ,Madurai ,Vikravandi ,
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...