×

சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன்

லக்னோ: சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் நாளை ஆஜராகுமாறு அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.

அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக இருந்த நேரத்தில் தடைக்கு பிறகும் சுரங்க ஒப்பந்தம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சுரங்க ஊழல் 2016 முதல் விசாரணையில் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதன்முறையாக அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு முன் அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது அரசியல் கண்ணோட்டத்திலும் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பும், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை மோடி அரசு தவறாக பயன்படுத்துவதாக அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி வருகிறார்.

இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்பு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இந்த முறையில் செயல்படும் எனவும் கூறியுள்ளார்.

The post சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் appeared first on Dinakaran.

Tags : Samajwadi Party ,Uttar ,Pradesh ,Chief Minister ,Akhilesh Yadav ,CBI ,Summons ,Lucknow ,Summon ,Dinakaran ,
× RELATED அகிலேஷ் மனைவிக்கு ரூ.15 கோடி சொத்து