×

கோயம்புத்தூர் அருகே ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியையை கட்டிப்போட்டு 25 சவரன் நகைகள் கொள்ளை

கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூரில் ஆசிரியையை கட்டிப்போட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் 2 பேர் நுழைந்து 25 சவரன் நகைகள் பறித்து சென்றனர். கொள்ளையர்கள் இருவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர், குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியை விஜயலஷ்மி. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் விஜயலஷ்மி வீட்டின் பின் வாசல் வழியாக உள்ளே வந்த 2 நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து சேலையால் விஜயலஷ்மியை கட்டிபோட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அவர் அணிந்திருந்த 11 சரவரன் நகை மற்றும் பீரோவில் வைத்திருந்த நகை என மொத்தமாக 25 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து விஜயலஷ்மி தொண்டாமுத்தூர் போலீசாரிடம் புகாரளித்தார்.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுத்தியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணையை துரித்தபடுத்தியுள்ளனர். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

The post கோயம்புத்தூர் அருகே ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியையை கட்டிப்போட்டு 25 சவரன் நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Thondamuthur ,Thondamuthur, Kurumbapalayam ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...